News November 20, 2025

குமுளி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்

image

குமுளி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (40). இவர் நேற்று (நவ.19) அவரது பைக்கில் கூடலூரில் இருந்து கம்பம் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக இசக்கியப்பன் (49) என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆரோக்கியதாஸ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News November 20, 2025

தேனி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

தேனி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது
<>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு க்ளிக் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT.

News November 20, 2025

தேனி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தேனி மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!