News October 22, 2025

குமரி: PF குறைதீர் முகாம் அறிவிப்பு

image

வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 குறை தீர்க்கும் முகாம் அக்.27 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர்கள் குறைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம் என நாகர்கோவில் மண்டல ஆணையர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

image

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT

News February 1, 2026

குமரி: பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

குமரி மாவட்டம், மேக்கா மண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா மனோகர் (66). இவர் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா மனோகர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 1, 2026

குளச்சல் அருகே சிறுமிக்கு நடந்த திருமணத்தால் பரபரப்பு

image

குளச்சல் அருகே 17 வயது சிறுமிக்கும், ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும் ஜன.28 அன்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலருக்கு தகவல் கிடைத்ததையடுத்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த சுபாஷ், சிறுமியின் தாயார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!