News November 6, 2025
குமரி: 310 சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுருளகோடு வெட்டு திருத்திகோணத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.
Similar News
News February 11, 2026
குமரி: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் கோவிலான் விளை, படர் நிலம், காட்டு விளை, பொட்டல், சேரமங்கலம், பிள்ளையார் கோவில், மணவாளக்குறிச்சி, சின்ன விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 10, 2026
பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதி மோதிரமலை, கோலாஞ்சிமடம்
போன்ற பகுதிகளில் இன்று (பிப். 10) பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.


