News December 26, 2025

குமரி: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

image

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News January 2, 2026

குமரி: டெம்போ மோதி இளைஞர் பலி!

image

குமரி ரட்சகா் தெருவை சோ்ந்தவா் அரிஷ் (23). வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்த நிலையில் தனது டூவீலரில் கொட்டாரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ அரிஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து குமரி போலீசார் விசாரணை.

News January 2, 2026

குமரியில்153 கிலோ கஞ்சா கடந்த ஆண்டு பறிமுதல்

image

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டு 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை நேற்று (ஜன.1) தெரிவித்துள்ளது.

News January 2, 2026

குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!