News April 13, 2025

குமரி : 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட Telecaller, Service Advisor பணி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து 04-06-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 7, 2025

குமரியில் நூதன முறையில் நகை பறிப்பு

image

வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தங்க லட்சுமி(70). இவரது மகன் இருதய சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க தங்க லட்சுமி வந்த போது ஒருவர் அடையாள அட்டை கிடைத்தால் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி வாங்கி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

News November 7, 2025

குருந்தன்கோட்டில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

குருந்தன்கோடு வட்டாரத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை,  தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் விவ சாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நாகர்கோவில் ஆத்திக்காட்டு விளையில் அடுத்த வாரம்  துவங்கப்படுகிறது. இதில் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ மூலம் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

News November 7, 2025

குமரி முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

image

கன்னியாகுமரி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராக R. பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நேற்று 06/11/2025 பணியேற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியாக இருந்த இவர், பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலதண்டாயுதபாணி சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!