News March 26, 2024

குமரி வேட்பாளர்களின் சொத்து விவரம்

image

குமரி மக்களவை தொகுதியில் நேற்று(மார்ச் 25) வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் சொத்து விவரம். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.7.60 கோடி; அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.8.10 கோடி, மனைவி பெயரில்-ரூ.1.04 கோடி; நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரின் அசையும், அசையா சொத்துகள்- ரூ.4.50 கோடி, கணவர் பெயரில் – ரூ.1.14 கோடி.

Similar News

News November 16, 2025

குமரி: +2 படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை

image

குமரி எல்லை செறியகொல்லா பகுதி தேங்காய் வியாபாரி சுரேஷின் 17 வயது மகளான +2 படிக்கும் மாணவிக்கு, 2 மாதத்திற்கு முன் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் தந்தையே மகள் என்றும் பாராமல் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று போலீசார்  சுரேஷை போக்சோ சட்டப்படி கைது செய்தனர்.

News November 16, 2025

தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

News November 15, 2025

BREAKING குமரியில் மிககனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

image

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!