News March 8, 2025
குமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 6500 திருப்பதி லட்டு வருகை

குமரி விவேகானந்தபுரத்தில் உள்ள கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் 6500 திருப்பதி லட்டு கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு இன்று(மார்ச்.8) முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க*
Similar News
News March 9, 2025
குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இம்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சூறைக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை நாளை திங்கட்கிழமைக்குள் முடித்து விடுவதும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2025
குமரி :மார்ச்12ல் பிஎஸ்என்எல் இணைப்பு மேளா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி மற்றும் வைபர் இணைப்பு பெற்று பணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள ஆசாரிப்பள்ளம் வடிவீஸ்வரம் இடலாக்குடி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளர்களுக்கு மறு இணைப்பு மேளா 12 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2025
குமரியில் பொது இடத்தில் மது குடித்த 193 பேர் கைது

குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், மேம்பாலங்கள், நீர்நிலைகரையோரம் உட்பட பொது இடங்களில் பலரும் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. மது போதையில் அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் பொது இடத்தில் மது அருந்துவோரை கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த 8 நாட்களில் மட்டும் பொது இடங்களில் மது குடித்ததாக மொத்தம் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.