News September 28, 2025

குமரி: வீட்டில் சட்டவிரோத மது விற்பனை

image

களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57), இவரது வீட்டில் அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, களியக்காவிளை போலீசாருக்கு நேற்று 27-ம் தேதி கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்த 50 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்து சத்தியதாஸை கைது செய்தனர்.

Similar News

News January 27, 2026

குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கன்னியாகுமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

நாகர்கோவில்: தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்

image

நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (44). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து இவர் நேற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் வேலை தொடர்பாக சென்ற போது அவரை மணிகண்டன் (37) ஐயப்பன் (26) ஆகியோர் தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கலைஞர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News January 27, 2026

குமரி: பெண் மீது ஆட்டோ மோதி விபத்து

image

அம்பேற்றன் காலை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தெற்றிகுழி ஜங்ஷனில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது சிதறால் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரது லோடு ஆட்டோ மோதியதில் அஸ்வதி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!