News May 20, 2024

குமரி: விவேகானந்தர் பாறை நினைவகம் சிறப்பு!

image

கன்னியாகுமரியில் அமைந்துள்ளது விவேகானந்தர் நினைவகம். பிரபல சுற்றுத்தலமான இது வாவத்துறையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இரண்டு பாறைகளில் ஒன்றில் அமைந்துள்ளது. 1970 இல் கட்டப்பட்ட இந்த நினைவத்தில் உள்ள மண்டபம் பல்வேறு கட்டடக் கலைகளை உள்ளடக்கி கட்டப்பட்டது. விவேகானந்தர் இந்த பாறையை அடைந்து தியானம் செய்து ஞானம் பெற்றதாக பல வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.

Similar News

News November 5, 2025

குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

image

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து  2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

News November 5, 2025

குமரி: முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

image

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய பால தண்டாயுதபாணி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட  தொடக்கக்கல்வி  அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (C.E.O) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

News November 5, 2025

குமரி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

image

குமாரபுரத்தைச் சேர்ந்த அருண் சஞ்சி (21) என்பவர் மின்வாரிய ஹெல்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக அருண் சஞ்சியை முத்துக்கிருஷ்ணன் உட்பட மூன்று பேர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!