News September 17, 2025
குமரி: விளையட்டு விபரீதமானது; இளைஞர் உயிரிழப்பு

கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23) அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன் கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.
Similar News
News September 17, 2025
நாகர்கோவிலுக்கு 959 டன் நெல் மூடைகள் வருகை

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கும்பகோணத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நெல் மூடைகள் ரெயிலில் அனுப்பி வைக்கபட்டன. இந்த நெல் மூடைகள் 21 பெட்டிகளில் நேற்று (செப். 17) நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. இதில் 959 டன் நெல் மூடைகள் இருந்தன. அவற்றை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
News September 17, 2025
குமரி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04652-278404. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
News September 17, 2025
நாகர்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாகர்கோவில் கோணத்தில் செப்.19 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.