News June 6, 2024

குமரி: விருதுக்கு விண்ணபிக்கலாம்!

image

அக்.1-2022க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூன் 29க்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04652 262060 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Similar News

News November 6, 2025

குமரி: Grindr செயலி மூலம் மோசடி – எஸ் .பி .எச்சரிக்கை

image

குமரி எஸ் பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு; Grindrசெயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி இதில் உள்ளது. இதன் மூலம் சில நபர்கள் பொது மக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

News November 5, 2025

குமரி: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

image

களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் அணில் என்பவரது மகள் லியா. சிறுமி கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லியா பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆறு காணி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News November 5, 2025

குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!