News March 17, 2026

குமரி: விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

image

புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய். கடந்த 2 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் 10 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அனு தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் தக்கலை அருகே நேற்று பைக்கில் சென்ற போது ஆம்னி பஸ் மோதி விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 7, 2026

குமரி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

குமரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <<-1>>இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 7, 2026

குமரி: 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக மொத்த வேட்பாளர்கள்: குமரி – 23, நாகர்கோவில் – 34, குளச்சல்–20, பத்மநாபபுரம் –19, விளவங்கோடு – 20, கிள்ளியூர் – 19 மொத்தம் ஆண் வேட்பாளர்கள் 114, பெண் வேட்பாளர்கள் 21 என வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2026

குமரி: பைக் விபத்தில் வாலிபர் பரிதாப பலி

image

தக்கலை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் சிபு, சீனு இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மூத்த மகன் சிபு திருமணத்திற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!