News November 21, 2024
குமரி விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்

குமரி அருகே 4 வழிச்சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் பரவூரைச் சேர்ந்த இருவர் நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News August 7, 2025
குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <
News August 7, 2025
இடைநிலை துணை தேர்வு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
News August 7, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தேதி நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.