News March 29, 2025
குமரி வழக்கறிஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தக்கலை அருகே 13.3.2025 அன்று 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் குமார் மாணவிகளை பைக்கில் ஏற்றி சென்று, ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குமரி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று அவர் சிறையிலடைக்கப்பட்டார். *வக்கீலின் இச்செயல் குறித்த உங்கள் கருத்து?
Similar News
News February 13, 2026
குமரி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 13, 2026
மகா சிவராத்திரி சிறப்பு ரயில் அறிவிப்பு..!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று (பிப்.13) இரவு 23:45-க்கு புறப்பட்டு (பிப்.14) மதியம் 1:00 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் வகையில் (வ. எண் 06135) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரியில் இருந்து (பிப்.16) இரவு 21:35-க்கு புறப்பட்டு (பிப்.17) காலை 10:15 க்கு சென்னை வந்தடையும் வகையில் (வ. எண் 06136) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
குமரி: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் கோமு (52). இவர் கோயிலுக்கு சென்று விட்டு நாகராஜன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருப்பதிசாரம் டோல்கேட் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கோமு கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


