News December 27, 2025

குமரி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

Similar News

News December 27, 2025

JUST IN குமரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்ட திருவிழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவினை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். அதற்கு ஈடாக ஜனவரி 10 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 27, 2025

குமரி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

குமரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க..

News December 27, 2025

குமரியில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

image

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.

error: Content is protected !!