News February 11, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
குமரியில் போதைப் பொருளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய்

குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக புதியதாக மோப்ப நாய் சென்னையில் இருந்து விரைவில் குமரி மாவட்டம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
News February 11, 2026
குமரி: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
குமரி: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


