News June 16, 2024
குமரி: ரூ. 6 கோடிக்கு மீன்கள் விற்பனை

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 61 நாள்கள் தடைகாலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுக்கு கேரை , விளைமீன் , பாரைமீன் , நவரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மீன் விற்பனை நடந்துள்ளது. கேரளா வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். மீன்களின் வரத்து குறைவால் விலையும் கிடு கிடுகிடுவென உயர்வு.
Similar News
News March 1, 2026
குமரி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News March 1, 2026
குமரி: வட்டார காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு

குமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றுப்பாலம் முதல் திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகளும், கொடிகளும் வைத்திருந்ததாக மேற்கு மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி(50) மீது களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அவை வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News March 1, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.


