News December 25, 2025

குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

Similar News

News December 29, 2025

குமரியில் கூடுதல் நுழைவுக்கட்டண வசூல்

image

சுற்றுலாதலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தில் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் வசூல் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லை. மேலும் நபர் ஒருவருக்கு நுழைவுக்கட்டணம் ஜி.எஸ்.டி யுடன் சேர்த்து ரூ. 5 என அருவிக்கரை ஊராட்சி நிர்வாகம் நிர்ணயித்த நிலையில் ரூ. 5.90 என ஜி. எஸ்.டி. தொகையை கூடுதலாக சேர்த்து ரூ.6 என வசூல் செய்கிறார்கள். தொட்டிப் பாலத்தில் கட்டணம் குறித்த பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

News December 29, 2025

குமரி : இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

கன்னியாகுமரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 மார்ச் – 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

குமரி: கண்ணாடியால் முதியவர் உயிரிழப்பு

image

குமரி மாவட்டம், கொல்லால் அருகே விரி விளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60) கூலி வேலை செய்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் பொருட்களை அடித்து உடைப்பது வழக்கம்.நேற்று வீட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததில் கையில் நரம்பு துண்டித்த நிலையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.

error: Content is protected !!