News January 9, 2026
குமரி: முன்னாள் எம்.எல்.ஏ வின் பேரன் குண்டாசில் கைது

அஞ்சுகிராமம் அருகே தனியார் சொகுசு விடுதியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தமிழகத்தையே அதிர வைத்தது. இதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பேரன் கோகுல் கிருஷ்ணன்(34) உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News February 16, 2026
குமரி: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், இங்கு <
News February 16, 2026
குமரி மாவட்டத்தில் 447 மண்டல அலுவலர்கள் நியமனம் – ஆட்சியர்

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 149 மண்டலங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என மொத்தம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 149 மண்ட லத்திலும் 447 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.
News February 16, 2026
கன்னியாகுமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

கன்னியாகுமரி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.


