News September 22, 2025

குமரி: முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாக ராஜன்(75). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று (செப்.21) மாலையில் அவரது மனைவி வீட்டிற்குள் இருந்தார். அப்போது வீட்டின் அருகில் நின்ற மரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் தியாகராஜனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Similar News

News September 22, 2025

குமரி: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

image

குமரியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 22, 2025

குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

குமரி: மாணவி தற்கொலை – வெளியான முதற்கட்ட தகவல்

image

இரணியல் பகுதியை சேர்ந்த ஞான செல்வன் மகள் அஸ்வினி (19). இவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரனையில், அஸ்வினி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு ரத்தத்தை பார்த்தால் அலர்ஜி இருந்துள்ளது. இதனால் நாகர்கோவிலில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!