News May 27, 2024
குமரி முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுகின்ற முக்கடல் அணை கடும் வெயில் காரணமாக 1 அடிக்கும் கீழாக நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையின் காரணமாக இன்று (மே.27) காலை நிலவரப்படி முக்கடல் அணை 12 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது.
Similar News
News November 5, 2025
குமரி: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் அணில் என்பவரது மகள் லியா. சிறுமி கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லியா பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆறு காணி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News November 5, 2025
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


