News October 21, 2025
குமரி: மீனவர்கள் திரும்ப நடவடிக்கை – நிர்மலா சீதராமன்

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பத்திரமாக கரைத் திரும்ப அவர்களது சாட்டிலைட் போன் சேவை இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
குமரி: திமுக நிர்வாகி & குடும்பத்தினர் கைது

குமரி, கருங்கல் பகுதியில் உள்ள ஷார்லின் சேம் கவரிங் கடையில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண், கடை ஊழியரின் கவனத்தை திருப்பி ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கமுலாம் பூசிய நகைகளை திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தி.மு.க. பேரூராட்சி துணைத்தலைவி பால்தங்கம், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர். இதில் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
குமரி: வங்கி வேலை..ரூ. 48,000 சம்பளம்

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
குமரி: அரசு பேருந்து ஏறியதில் ஒருவர் பலி

நாகர்கோவிலில் அருகே கட்டையன் விளையை சேர்ந்தவர் அசாரி (65). இவர் கட்டையன் விளையில் ரோட்டை கடக்கும் போது அந்த வழியாகச் சென்ற பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அசாரி கீழே விழுந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்த அசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


