News October 25, 2024
குமரி மாவட்ட எஸ்.பி அறிக்கை வெளியீடு
குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மழைக்காலமானதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும்; தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்; மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்; தேவையற்ற வதந்திகளை பரப்பக் கூடாது” என்று கூறியுள்ளார்.
Similar News
News November 20, 2024
குமரி தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2024
குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக நிறுத்தம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று(நவம்பர் 20) கடலில் பயணம் செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News November 20, 2024
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 6,436 பேர் பயன்!
பெண் சிசுக்கொலையை தடுக்க உருவான “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 1,948 பேரும், 2022-23ல் 2,242 பேரும், 2023-24ல் 1,771 பேரும், 2024-25.ல் இதுவரை 475 பேர் என மொத்தம் 6,436 பெண் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மாவட்ட அதிகாரி விஜய மீனா தெரிவித்துள்ளார்.