News March 22, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 22) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு 101 வது நாளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ள விளை சந்திப்பில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Similar News

News September 22, 2025

குமரி: முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாக ராஜன்(75). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று (செப்.21) மாலையில் அவரது மனைவி வீட்டிற்குள் இருந்தார். அப்போது வீட்டின் அருகில் நின்ற மரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் தியாகராஜனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

News September 22, 2025

குமரி: மாணவி தற்கொலை – வெளியான முதற்கட்ட தகவல்

image

இரணியல் பகுதியை சேர்ந்த ஞான செல்வன் மகள் அஸ்வினி (19). இவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரனையில், அஸ்வினி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு ரத்தத்தை பார்த்தால் அலர்ஜி இருந்துள்ளது. இதனால் நாகர்கோவிலில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

News September 22, 2025

குமரி: பட்டாவில் திருத்தமா?

image

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!