News March 16, 2025
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

#குமரியில் இன்று(மார்ச் 16) பிற்பகல் 2 மணிக்கு கல்வி மற்றும் கலை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வடசேரியில் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடக்கிறது.#பிற்பகல் 2.30 மணிக்கு தெற்குச் சூரங்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.#மாலை 6 மணிக்கு தேவ சகாயம் மூன்று காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பரம் பவனி நடக்கிறது.
Similar News
News March 16, 2025
கன்னியாகுமரி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே ‘<
News March 16, 2025
கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சி தலைவர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 22.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டம் ஆனது 23.03.2025 அன்று காலை 11 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
News March 16, 2025
குமரி சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

குமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மருத்துவ அலுவலர் 5, செவிலியர் 5, பல்நோக்கு சுகாதார பணியாளர் 5, மருத்துவமனை பணியாளர் 5 என 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் மார்ச் 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <