News March 15, 2025
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 15) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் 95வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு நித்திரவிளை சந்திப்பில் CPIML Red flag சார்பில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Similar News
News March 15, 2025
40 வயதிற்கு மேல் கண் பரிசோதனை அவசியம் – கலெக்டர்

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2024ஆம் ஆண்டு 443 பேருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறியப்பட்டு 392 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, 22 நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சையும், 30 பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. குமரி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 14) தெரிவித்துள்ளார். SHARE IT.
News March 15, 2025
குமரி அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு!

கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 47. இவரது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவர் சுடர் பிரவீனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுடர் பிரவீன் ஜெயந்தி வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மகன் குமாரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் நேற்று(மார்ச் 14) வழக்குப் பதிவு செய்து சுடர் பிரவினை கைது செய்தனர்.
News March 14, 2025
குமரி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி முற்பகல் 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*