News November 9, 2024
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

#காலை 10 மணிக்கு குமரி மாவட்ட மகளிர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தக்கலை காவல் நிலையத்தில் போராட்டம். திமுக மகளிரணி அமைப்பாளர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம். #மாலை 4 மணிக்கு மணக்குடி பேருந்து நிறுத்தம் அருகே சுனாமி காலனி குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தர்ணா. #9 மணிக்கு படுகரை பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து கருத்தரங்கு.
Similar News
News November 12, 2025
குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

BREAKING நாகர்கோவில்: நாய் கடித்த இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளின்று அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.