News August 17, 2024

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 35.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும்,  சுருளோட்டில் 23.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, மழையினால் பேச்சுப்பாறை அணைக்கு 723 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 501 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Similar News

News December 6, 2025

குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 6, 2025

குமரி: பைக் மீது மோதிய கார்! சம்பவ இடத்திலேயே பலி

image

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ரஞ்சித் தாஸ் அவரது சகோதரி ரம்யா ஆகியோர் டூவீலரில் இன்று வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீதும் மோதியது. இதில் ரஞ்சித்தாஸ், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இதில் ரஞ்சிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.

News December 6, 2025

குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!