News January 7, 2025
குமரி மாவட்டத்தில் HMPV வைரஸ் பாதிப்பு இல்லை

இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையிலும் HMPV வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. *இருந்தாலும் SAFETY முக்கியம் மக்களே*
Similar News
News January 28, 2026
குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்!

குமரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 28, 2026
குமரி: தோட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம், கார்த்திகை வடலி என்ற இடத்தில் குளத்தின் கரையில் உள்ள தென்னந்தோட்டத்தில் ஒருவர் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News January 28, 2026
குமரி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

குமரி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <


