News March 16, 2025
குமரி மாவட்டத்தில் 2வது கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி

குமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் தேதி நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உத்திர பாஞ்சான், தெற்கு மலை உதயகிரி கோட்டை மருந்து வாழ் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News March 16, 2025
நாகர்கோவில் வருகிறார் நடிகர் வடிவேலு!

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மார்ச் 19ஆம் தேதி வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் திரைப்பட நடிகர் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமையில் வருமான வரி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.*வடிவேலு ரசிகர்களுக்கு பகிரவும்*
News March 16, 2025
குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்த புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2025
“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் அறிவிப்பு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு மற்றும் நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைந்து பங்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.