News July 10, 2025
குமரி மாவட்டத்தில் 1,100 தொழிற்சங்கத்தினர் கைது

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பறக்கை, குலசேகரம், அருமனை, மார்த்தாண்டம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் 330 பெண்கள் உட்பட 1100 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News July 10, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை10) நீர்மட்ட விவரம் : பேச்சிப்பாறை அணை – 41.81 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.28 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.38 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 406 கனஅடி, பெருஞ்சாணிக்கு 164 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News July 10, 2025
குமரி: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04652227339 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News July 10, 2025
படித்த இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

குமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் நான் முதல்வன் / பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் Eco Tourism & Hospitality Executive and Tourist Guide பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழலியல் சுற்றுலா தலத்தில் 11.07.2025 முதல் 30 நாட்கள் 200 மணி நேரம் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று குமரி கலெக்டர் தெரிவித்துள்ளார். பயனுள்ள இந்த தகவலை SHARE செய்யவும்.