News August 2, 2024
குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News December 26, 2025
குமரி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; 17 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டம், புதுக்கடை போலீஸ் சரக பகுதியில் இணையம் புத்தம் துறை சர்ச் எதிரிலும், ஹெலன் நகர் (ம) இணையம் பீச் பகுதிகளிலும் அதிக ஒளி விளக்குகள் அமைத்து டிஜே சிஸ்டத்துடன் அதிக ஒலி எழுப்பி கிறிஸ்மஸ் விழா பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 17 பேர் உட்பட பலர் மீது புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 3 வழக்குகள் புதுக்கடை போலீஸ் சரக பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
News December 26, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 26, 2025
குமரி: பைக் மோதி டிரைவர் பலி!

தக்கலை பகுதியை சேர்ந்தவர் மணி (53) டிரைவர். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற அவர் கோழிப்போர்விளைவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையின் வலது பக்கம் திரும்பிய போது பின்னால் வந்த டூவீலர் மணி மீது மோதியது. இதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை.


