News November 16, 2024

குமரி மாவட்டத்தில் மழை தொடரும் – வானிலை மையம் 

image

இலங்கை அருகே நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவுக்குள் வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் மழை தொடரும் வங்கக் கடலின் கிழக்கு திசைக்காற்று குமரி மாவட்டத்தின் மத்திய வேலை தொடரில் மோதுவதால் மேற்குக் கடற்கரை நோக்கி நகரும் மேகங்களால் கனமழை கிடைக்க செய்ய உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

Similar News

News March 2, 2026

குமரி: குளச்சல் அருகே இளைஞர் தற்கொலை

image

பாலப்பள்ளம் அருகே கூந்தன் விளையை சேர்ந்தவர் அனில் குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காதால் ஊருக்கு திரும்பியவர் அவரது அண்ணனுடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய குளச்சல் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

குமரி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.

News March 1, 2026

குமரி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!