News March 16, 2025
குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்த புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 13, 2025
குமரியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

நாளை (14ம் தேதி) தென் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்களை ஒன்றி உள்ள கேரள பகுதி தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
News September 13, 2025
குமரி: உங்க நீதிமன்ற CASE நிலை என்னனு தெரியலையா??

குமரி மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட்க்கு அலையுறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 13, 2025
குமரி: ரேஷன் கார்டு பிரச்னைகளை தீர்க்க இன்று முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட செயல்பாட்டை களைவதற்காக சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.