News November 20, 2024
குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News August 8, 2025
கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.
News August 7, 2025
குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <