News March 26, 2025
குமரி மாவட்டத்தின் ஸ்பெஷல் பட்டியல்

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. அதன்படி, குமரியின் தித்திக்கும் தின்பண்டங்களையும் சுவையான உணவுகளையும் லிஸ்ட் போட்ருக்கேன். பாருங்க. உண்ணியப்பம், புட்டு/பழம்/பயறு.அப்பளம், ஆப்பம்/ முட்டைக்றி, நேந்திரம் சிப்ஸ், அவியல் கூட்டு, மோதகம், மாவு உருண்டை, முந்திரிகொத்து, ஆயினி பலா, காந்தாரி மிளகாய், தேன் குழல் மிட்டாய், கறி பலா, புளிச்சி நெல்லிக்காய். உங்களுக்கு பிடிச்ச பண்டம் என்ன?
Similar News
News April 10, 2025
குமரி கடலில் பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு – எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் அடிக்கடி எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2025
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகையை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ. எண் 06089 ) ஏப்ரல் 10 &17 ஆகிய இரு தினங்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி புறப்படும் மறுமார்க்கத்தில் (வ.எண் 06090 ) ஏப்ரல் 11 & 18 கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
குமரி மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற 3 பொருட்கள்

மாறாமலை கிராம்பு (இந்தியாவில் மொத்த கிராம்பு உற்பத்தியில் 750 டன் குமரியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மட்டி வாழைப்பழம் (தென் திருவிதாங்கூர் மலைகளில் மட்டுமே வளரும் ஒரு அரிய வகை வாழை)
ஈத்தாமொழி நெட்டைத் தென்னை (இந்த ரகத்தின் தேங்காய், 700கி.கி எடையும், எண்ணெய் சத்து அதிகமாக இருப்பதால், மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யலாம்) *தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க