News May 18, 2024
குமரி மாணவி அசத்தல்

மருதூர்குறிச்சியைச் சேர்ந்தவர் எட்வின்ஜோஸ் மகள்
ஏஞ்சலின் லிபிகா. ஒன்றரை வயதில் நூறு சதவீத கண்பார்வை இழந்த இவர், +2 பொதுதேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தனியார் பள்ளியில் படித்தார். இவர் மாணவர்கள் மத்தியில் உதவியாளர் இன்றி தானே மடிக்கணினி மூலம் தேர்வு எழுதி 449 மதிப்பெண் பெற்றார். குமரி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பார்வையற்ற மாணவியான இவரை பலரும் பாராட்டினர்.
Similar News
News November 5, 2025
குமரி: முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய பால தண்டாயுதபாணி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (C.E.O) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.
News November 5, 2025
குமரி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

குமாரபுரத்தைச் சேர்ந்த அருண் சஞ்சி (21) என்பவர் மின்வாரிய ஹெல்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக அருண் சஞ்சியை முத்துக்கிருஷ்ணன் உட்பட மூன்று பேர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 5, 2025
குமரி: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


