News November 24, 2024

குமரி மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பெண்கள் கைது

image

கருங்கல் திப்பிறமலை ராணுவ வீரர் ஜெர்சன்(28) கடந்த ஜூன் மாதம் அருகில் உள்ள 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றார். புகாரின் பேரில் இவரை போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் புகாரை வாபஸ் பெறக்கேட்டு ஜெர்சனின் தாய் விஜயகுமாரி, சகோதரி ஆன்சிலின் ஆகியோர் மிரட்டியதை அடுத்து இருவரையும் நேற்று(நவ.23) குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

குமரி: மனோதங்கராஜை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

image

ஆர் .எஸ் .எஸ் மற்றும் பாரதிய பாரதிய ஜன சங்கம் மீது பொய்யான அவதூறுகளை பரப்பும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் -ஐ கண்டித்து இரணியல், குளச்சல், திங்கள் சந்தை, வெள்ளி சந்தை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.13) குமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!