News December 30, 2025
குமரி: மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அரசியல் பிரமுகர்

அருமனை பாண்டியன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (54). இவர் ஜனதா தளம் தலைவராக உள்ளார். இவர் நேற்று (டிச.29) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மாடு இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண் கிறிஸ்டோபர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News January 28, 2026
குமரியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே மணியாரங்குன்று பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
குமரி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நாளை மறுநாள் ஜன.30 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் அரசு துறைகளால் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மீனவர்கள் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


