News December 2, 2024
குமரி மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 383 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டதாக ஆட்சியர் அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 5, 2025
பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு விருது

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநில திட்டக்குழு ஆணையத்தால் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் பூதப்பாண்டி அரசு மருத்துவனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருது (Best Practices Award) வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
News August 5, 2025
கன்னியாகுமரி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தெரியுமா?

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <
News August 5, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.