News November 26, 2025
குமரி மக்களே மழை நேரத்தில் இது ரொம்ப முக்கியம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுவதும், இடி மின்னலால் மின்மாற்றிகள் சேதமடையும் சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களுடன் 8903331912 என்ற வாட்சப் எண்ணில், மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT
Similar News
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


