News November 19, 2024
குமரி: மகன் தாக்கியதில் சிகிச்சையில் இருந்த தந்தை பலி!

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த தங்கப்பன் – கோசலை தம்பதியின் மகன் ராஜேஷ்குமார்(37). இவர் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தங்கப்பனை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ்குமாரை வெள்ளிச்சந்தை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்கப்பன் நேற்று(நவ.,18) இறந்துபோன நிலையில், ராஜேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.
Similar News
News August 8, 2025
கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.
News August 7, 2025
குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <