News April 5, 2025
குமரி: போலீஸ் வீட்டில் திருட்டு

வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பிந்துஜா கணவரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
Similar News
News April 9, 2025
குமரி : 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 9, 2025
குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன் மனைவி மாயம்

குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென மாயமானார்.ரூ.25,000ஐ அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News April 9, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணி – சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளவை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு CPI(M)சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 11 மணி – வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி CPI(ML) Red flagசார்பில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 9:15 மணி – பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.