News December 28, 2025
குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 28, 2025
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சுசீந்திரம் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்தவர் வெர்ஸ்லின் ஹரணி (23). இவர் நர்சிங் படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்தது. இந்த காரணத்தால் நேற்று (டிச.27) வெர்ஸ்லின் ஹரணி வீட்டு படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
குமரி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

குமரி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News December 28, 2025
குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <


