News December 28, 2025
குமரி: போதையில் கீழே விழுந்து ஊழியர் பலி!

திருவனந்தபுரம் அருகே அருவிக்கரையைச் சேர்ந்தவர் புகாரி (52). இவர் தற்போது கல்லுக் கூட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். கோழிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் எற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News December 29, 2025
குமரி: கண்ணாடியால் முதியவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம், கொல்லால் அருகே விரி விளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60) கூலி வேலை செய்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் பொருட்களை அடித்து உடைப்பது வழக்கம்.நேற்று வீட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததில் கையில் நரம்பு துண்டித்த நிலையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.
News December 28, 2025
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சுசீந்திரம் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்தவர் வெர்ஸ்லின் ஹரணி (23). இவர் நர்சிங் படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்தது. இந்த காரணத்தால் நேற்று (டிச.27) வெர்ஸ்லின் ஹரணி வீட்டு படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
குமரி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

குமரி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <


