News December 26, 2025

குமரி: பைக் மோதி டிரைவர் பலி!

image

தக்கலை பகுதியை சேர்ந்தவர் மணி (53) டிரைவர். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற அவர் கோழிப்போர்விளைவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையின் வலது பக்கம் திரும்பிய போது பின்னால் வந்த டூவீலர் மணி மீது மோதியது. இதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை.

Similar News

News December 26, 2025

குமரி: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

image

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 26, 2025

கொடிக்கம்பம் நடுவது குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நிகழ்வுகள், தேர்தல் பரப்புரைகள், மாநாடுகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் 7 தினங்களுக்கு முன்னதாக உரிய வாடகை கட்டணம் செலுத்தி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

குமரி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

குமரி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

error: Content is protected !!