News April 13, 2025
குமரி : பைக் திருடிய 2 பேர் கைது

குழித்துறை பகுதியில் பைஜு என்பவரின் உயர்ரக பைக் திருட்டு போனது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் பைக்கை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 14, 2025
குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 14, 2025
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE