News February 28, 2026
குமரி: பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி – கலெக்டர்

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கு இலவசமாக தடுப்பூசி செலுத்துதல் இன்று முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது. குமரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இவை வழங்கப்படவுள்ளது. இந்தத் தடுப்பூசி மூலம் 14 வயதுடைய பெண் குழந்தைகள் 8,000 பேர் பயனடைவார்கள் என்று குமரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
மண்டைக்காடு: மூன்று இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதையொட்டி நடு ஊர் கரை, வெட்டுமடை, புதூர் ஆகிய இடங்களில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
குமரி: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <
News February 28, 2026
குமரியில் 800 போலீசார் குவிப்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்காக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களான பார்க்கிங் பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் சுமார் 150 சிசி டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.


