News January 1, 2026

குமரி: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலி

image

மாங்காவிளையை சேர்ந்த ஸ்டாலின் (50) உண்ணாமலை கடை பேரூராட்சி 7ம் வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவர் டிச.17ம் தேதி இரவு வீட்டு அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (டிச.31) உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

Similar News

News January 29, 2026

பிப்.1-ல் மதுக்கடைகள் இயங்காது – கலெக்டர்

image

வடலுார் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள், FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

image

மருங்கூர் – இரவிபுதூர் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த டெம்போ கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. விபத்தில் டெம்போ டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். டெம்போவில் இருந்த செங்கல் லோடு வயலில் சிதறியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், இந்தப் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் சாலை மற்றும் வயல் ஓரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை.

News January 29, 2026

குமரி: Spam Calls-க்கு இனி END CARD

image

குமரி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!