News September 24, 2025

குமரி: பள்ளி மாணவர் மயங்கி விழுந்து பலி

image

தக்கலை சரல்விளையில் வசிக்கும் ஷேக் முகமதுவின் மகன் பயாஸ் அகமது(16).  தக்கலை அரசு பள்ளியில் 11.ம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று (செப்.23) நண்பர்களுடன் வள்ளியாற்றில் குளிக்கச்சென்றார். குளித்த பின்னர் பயாஸ் அகமது ஆற்றங்கரையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக்கூறினர். கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News September 24, 2025

குமரி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

குமரி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 24, 2025

குமரி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

image

குமரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் செய்யலாம்<<>>. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 24, 2025

குமரி: வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது

image

தக்கலை அருகே பருத்தியறை அருள்தாஸ் என்பவரின் வீட்டில் தக்கலை போலீசார் திடீர் சோதனை நடத்திய போது ஒரு தொட்டியில் கஞ்சா செடி இருந்துள்ளது. அவரது மகன் அஜின்(26) விசாரித்தனர். சென்னையில் டீ மாஸ்டராக இருந்த அஜினுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், ஒரு முறை வாங்கிய கஞ்சா பொட்டலத்தில் இருந்த விதையை முளைக்க வைத்து செடியாக வளர்த்ததாகவும் போலீசிடம் கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!